
சுயநலத்தை மையமாகக்கொண்ட வாழ்வு, ஒரு நாளும் மகிழ்வை நோக்கி இட்டுச் செல்லாது என்ற எண்ணத்தை, இஞ்ஞாயிறன்று, அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
உயிர்ப்பு காலத்தின் ஐந்தாவது ஞாயிறான, மே 10ம் தேதி, தன் நூலகத்திலிருந்து நண்பகல் அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு இறுதி இரவுணவின்போது, சீடர்களிடமிருந்து விடைபெற்றுச் செல்வதற்கு முன்வழங்கிய உரையிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு பகுதியை (யோவான் 14: 1-12) மையப்படுத்தி, தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
இயேசு எப்போதும் நம் அருகே இருக்கிறார் என்பதையும், நமக்கென ஓர் இடம் வானுலகில் காத்திருக்கிறது என்பதையும் உறுதியாக நம்பியவர்களாக, மனம் தளராமல் செயல்படவேண்டும் என அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.
Source: New feed
