
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரித்துள்ளது.
இன்றைய தினம் புதிதாக ஐவர் இந்த தொற்றுக்குள்ளானமை உறுதி படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கின்றது.
அத்துடன், இத்தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 245 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அந்த பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது.
Source: New feed
