
திருமறைக் கலாமன்றத்தின் 55வது ஆண்டு தினமும், மன்றத்தின் இயக்குநர் அருட்கலாநிதி நீ.மரியசேவியர் அடிகளாரின் பிறந்த தினம் ஆகியவற்றை சிறப்பிக்கும் முகமாக பல்வேறு நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாண மன்றத்தின் தலைமையகத்தில் இடம்பெற்றன.இந்நிகழ்வுகளில் மன்றத்தின் அங்கத்தவர்கள்,ஆதரவாளர்கள்,நலன்விரும்பிகள் என பெருமளவானோர் கலந்துகொண்டார்கள் அன்றைய தினம் காலை 7.00 மணியளவில்
மன்றத்தின் உதவி நிர்வாக இயக்குநர் அருள்பணி அ.அன்ரன் ஸ்ரிபன் அடிகளார் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு தொடர்ந்து மன்ற கொடியேற்றதுடன் இரத்ததானம் நிகழ்வும் இடம்பெற்றது
Source: New feed