
இவ்வருடம் உயர்தர பரீட்சை எடுத்த மாணவர்களுக்கும், கல்வியை நிறைவு செய்து வேலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் இளையோருக்குமான தலமைத்துவ பயிற்சி இம்மாதம் 07ம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் 11ம் திகதி வெள்ளிக்கிழமை வரை காலை 8.30 மணியிலிருந்து மதியம் 2.00 மணி வரை யாழ். மறைக்கல்வி நடுநிலைய வளாகத்தில், யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
தலமைத்துவம், சுயமதிப்பு, இலக்கமைத்து முன்னேறுதல், ஆளுமை விருத்தி, உணர்வுகளை கையாழுதல், அரசியலில் இளையோரின் கடமைகள், சமூக மேம்பாட்டில் போதைப்பொருளின் தாக்கம், சமூக வலைத் தாங்களும் இளையோரில் அவை ஏற்படுத்தும் தாக்கங்களும், உன்னால் முடியும், தலமைத்துவத்தை ஏற்பதற்கான தடைகள், அரங்கச் செயற்பாடுகள் போன்ற தளங்களில் கருத்துரை, குழுச்செயற்பாடு, விளையாட்டுக்கள் என்பவற்றினூடாக இப்பயிற்சி வழங்கப்பட்டது.
இப்பயிற்சியில் 50ற்கும் அதிகமான இளையோர் பங்குபற்றி பயனடைந்தனர். பயிற்றப்பட்ட இளையேருக்கான சன்றிதழ் வழங்கும் நிகழ்வு 26ம் திகதி காலை 9.30 மணிக்கு யாழ்.மறைக்கல்வி நடுநிலைய கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதுடன், இந்நிகழ்வினை தலமைத்துவப் பயிற்சியில் பங்குபற்றிய இளையோரே முன்னின்று நடத்தவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
Jaffna RC Diocese
Source: New feed
