
மாந்தை மாதா ஆலய பங்கு பணி மனையின் கதவு இன்று 30.09.2019 திங்கள் கிழமை மதியம் 2:00மணியளவில் உடைக்கப்பட்டு பங்கு பணி மனை அறைக்குள் காணப்பட்ட பணம் இனம் தெரியாத நபர்களினால் திருடி செல்லப்பட்டுள்ளது.
மாந்தை மாதா ஆலய பங்குத்தந்தை இல்லாத நேரத்தில் நடைபெற்றுள்ளது. பங்கு மனைக்கு திருப்பி வந்த நிலையில் கதவுகள் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்ட சம்பவத்தை மன்னார் ஆயர் இல்லத்திற்கு தெரியப்படுத்தியதுடன் வண பிதா எமிலியான்ஸ் பிள்ளை அடிகளாரால் மன்னார் காவல் நிலையத்திலும் முறைப்பாடு கொடுக்கப்பட்டது.

முறைப்பாட்டை தொடர்ந்து மன்னார் காவல் துறையினர் மற்றும் மன்னார் மறைமாவட்ட குடும்பநல பணியக இயக்குனர் வண பிதா எமிலியான்ஸ் பிள்ளை அடிகளார், மற்றும் மன்னார் பேராலய பங்குத்தந்தை வண பிதா ஞானப்பிரகாசம் அடிகளார், ஆயர் இல்லத்தின் நிதியாளர் வண பிதா ஜெயபாலன் அடிகளார், அடம்பன் பங்குத்தந்தை வண பிதா நவரெட்ணம் அடிகளார் மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் செயலாளர் திரு.கெனடி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று நடைபெற்ற சகல விதமான பிரச்சனைகளுக்குரிய தகவல்களை பெற்றுக்கொண்டுள்ளதுடன் உரிய நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக மன்னார் காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
Source: New feed
