
யாழ் மறை மாவட்டத்தின் தீவக மறைக்கோட்ட பீடப்பணியாளர்களுக்கான இரு நாள் செயலமர்வு26.08.2019- 27.08.2019 திகதிகளில் மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வை தீவக மறைக்கோட்ட முதல்வர் அருட்பணி. டேவிட் அடிகளோடு இணைந்து தீவக மறைக்கோட்ட பீடப்பணியாளர்களுக்கு பொறுப்பாளராக இருக்கும் அருட்பணி. ஹெரோணியஸ் அடிகளார் ஒழுங்கமைப்பு செய்திருந்தார்.
இந்நிகழ்விற்கு வளவாளர்களாக சலேசியன் துறவற சபையை சார்ந்த
அருட்பணி. அன்ரன் ஞானராஜ்.றெவல்
அருட்சகோ. திருத்தொண்டர். ஜே. செபஞானம்
அருட்சகோ. டேவிட் ஆகியோர் இனைந்து பல்வேறு தலைப்பின் கீழ் பயிற்சிகளை மேற்கொண்டார்கள்.
அத்தோடு பீடப்பணியாளர்களுக்கான விசேட திருப்பலியும் சலேசிய சபையின் அருட் தந்தை அன்ரன் ஞானராஜ்.றெவல் அவர்களினால் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இந்த அருமையான வாய்ப்பை எமக்களித்த அருட்பணி. ஹெரோணியஸ் அடிகளாருக்கும் இந்நிகழ்விற்கு எம்மை அறிமுகம் செய்த அருட்பணி. மில்பர் வாஸ் CMF அடிகளாருக்கும் சலேசியன் துறவற சபையினர் நன்றிகளை தெரிவித்து நிற்கின்றார்கள்.
அத்தோடு இப் பீடப்பணியாளர்களை ஒழுங்கு செய்த அருடந்தையர்கள், பீடப்பணியாளர்களுக்கான பொறுப்பாளர்கள், இதில் பங்கு பற்றிய அருட்சகோதரிகள் அனைவருக்கும் சலேசியன் துறவற சபையினர் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து நிற்கின்றார்கள்.
Source: New feed
