
மடுத் திருத்தலத்திற்கு வருகின்ற பக்தர்களின் நலன் கருதி அரசாங்கம் வழங்கும் உதவிகளை ஏற்றுக்கொள்வோம் என மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அன்பிற்கும் பெருமதிப்புக்குமுரிய வண பிதா விக்டர்.சோசை அடிகளார் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாட்டின் கெளரவ பிரதமமந்திரி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 15ம் திகதி மடு அன்னையின் திருவிழாவிற்கு வருகை தந்த வேளை மடுதிருப்பதிக்கு அத்தியவசிய தேவைகளை கேட்டுகொண்டதன் பிரகாரம் வீட்டுவசதிகள், மற்றும் மலசலக்கூடம் மற்றும் தேவையான சில முக்கிய விடயங்கள் தொடர்பாகவும் குருமுதல்வர் அவர்கள் பரிந்துரை செய்திருந்தார்.
அந்த நேரத்தில் உடனடியாக இராஜாங்க அமைச்சர் நிரோசன்.பெரேராவை அழைத்து நான் கூறுவதைக்கேட்டு அதனை உடனடியாக செய்ய வேண்டும் என பணிப்புரை வழங்கியிருந்தார்.
ஆனால் இந்தியஅரசாங்கத்தினால் வழங்கப்படவிருந்த வீட்டுத்திட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆனால் பிரதமர் கூறிய விடயத்திற்கு இராஜாங்க அமைச்சர் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் மடுத்திருத்தலத்திற்கு வருகைதருவது வழமை. குறிப்பாக ஆவணி திருவிழாவிற்கு 6இலட்சத்திற்கும் மேற்மட்ட மக்கள் வருவது வழமை.
அவர்களுக்கான மலசல கூடங்கள் இங்கே உள்ளது போதுமானதாக இல்லை. மக்களின் நலனை கருத்தில் கொண்டு பிரதமர் அவர்களின் வேண்டுகோளுக்கு அமைவாக 252 மலசலக்கூடத்தினை வடிவமைக்குமுகமாக இராஜாங்க அமைச்சர் நிரோசன்.பெரேரா அவர்கள் அடிக்கல்லினை வைத்து ஆரம்பித்து வைத்தார்.
இந்த நிகழ்வினை குருமுதல்வர் அவர்கள் இறையாசீர் வழங்கி ஆரம்பித்து வைத்ததோடு இந்த நிகழ்விற்கு மடு பரிபாலகர் வண பிதா பெப்பி.சோசை அடிகளார், அரசாங்க அதிபர், மடு பிரதேச செயலாளர், அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.
மடுத் திருத்தலத்திற்கு வருகின்ற பக்தர்களின் நலன் கருதி மலசலக்கூடம் அமைப்பதற்கு உதவி புரிந்த கெளர பிரதமர் ரணில் விக்கிரமசிங்கா அவர்களுக்கும், இராஜாங்க அமைச்சர் நிரோசன் பெரேரா அவர்களுக்கும் ஆயர், குருக்கள், கன்னியர்கள் , அருட்சகோதரர்கள் , கத்தோலிக்க இறைமக்கள் சார்பான நன்றிகளையும், பாராட்டுக்களையும் செபங்களையும் தெரிவித்து நிற்கின்றோம்.
Source: New feed
