
இலங்கையில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் அனைத்துப் பழிவாங்கும் தாக்குதல்களுக்கு எதிராய், கத்தோலிக்கத் திருஅவை செயல்படும் என்று, கொழும்பு பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் உறுதி கூறியுள்ளார்.
இலங்கையில், ஏப்ரல் 21, உயிர்ப்பு ஞாயிறன்று கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில், 250க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தும், ஏறத்தாழ 500 பேர் காயமடைந்தும் உள்ளவேளை, முஸ்லிம்களுக்கு எதிராக கத்தோலிக்கத் திருஅவை ஒருபோதும் செயல்படாது என்று அறிவித்துள்ளார், கர்தினால் இரஞ்சித்.
முஸ்லிம்கள், எந்தவிதத் துன்புறுத்தல்களையும் எதிர்கொள்வதற்கு கத்தோலிக்கரை அனுமதிக்கமாட்டோம் எனவும் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் உறுதி கூறியுள்ளார்.
Source: New feed