
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கான் பொருளாதர அவைக் கூட்டத்தில் கலந்துகொண்டோரை, திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.
மேலும், சிறாரை படைவீர்ர்களாகப் பயன்படுத்தும் நிலையை எதிர்க்கும் உலக நாள், இச்செவ்வாயன்று கடைபிடிக்கப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ‘ஆயுதம் தாங்கிய மோதல்களில் போரிட கட்டாயப்படுத்தப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான சிறார்களின் குழந்தைப் பருவம் திருடப்பட்டுள்ளது. வெறுக்கத்தக்க இக்குற்றத்தைத் தடுத்து நிறுத்துவோம்’ என எழுதியுள்ளார்.
இதற்கிடையே, வத்திக்கான் வானொலி, பிப்ரவரி 12, இச்செவ்வாய்க்கிழமையன்று, தன் 88ம் ஆண்டுகள் பணியை நிறைவுசெய்தது.
வத்திக்கான் என்ற தனி நாடு உருவாக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப்பின் 1931ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 12ம் தேதி, வத்திக்கான் வானொலி நிலையத்தை, வானொலியைக் கண்டுபிடித்த குலியெல்மோ மார்க்கோனி அவர்களின் துணையுடன் உருவாக்கினார், திருத்தந்தை 11ம் பயஸ்.
ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட உலக வானொலி நாள், ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி 13ம் தேதி சிறப்பிக்கப்படுகின்றது.
Source: New feed