அனுராதபுரம் மறைமாவட்டத்தில் 08.03.2019 வெள்ளிக்கிழமை ஆரம்பமாகி நடைபெற்ற 75 வது தேசிய இளையோர் ஒன்றுகூடலில் யாழ்ப்பாணம் மறைமாவட்ட இளையோர் ஒன்றிய உறுப்பினர்களும் இணைந்து கொண்டனர். இந்நிகழ்வில் இலங்கையில் உள்ள அனைத்து மறை மாவட்டங்களிலிருந்தும் நூற்றுக்கும் அதிகமான இளையோர் கலந்து பயனடைந்தார்கள். அனுராதபுரம் மறைமாவட்டத்தில் நொச்சியாகமம் பிரதேசத்தில் அமைந்துள்ள டொன் பொஸ்கோ தொழிற்பயிற்சி நிலையத்தில் இம்மாதம் 8, 9, 10 ஆம் திகதிகளில். ‘இதோ ஆண்டவரின் அடிமை…’ என்ற தொனிப்பொருளில் இவ் இளையோர் ஒன்றுகூடல் நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது
RC
Source: New feed