இன்று வானில் ஒரு அதிசயம் நடைபெற இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பௌர்ணமி நாளான அன்று நிலவு பூமிக்கு மிக மிக அருகே வரவுள்ளது.
இதனால் அன்றைய தினம் ‘super moon’ அதாவது நிலா மிகப் பெரியதாக காணப்படும் என அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த ‘super moon’ சுமார் 70 ஆண்டுகளுக்குப் பிறகு பூமியை நெருங்குகிறது. இறுதியாக 1948ஆம் ஆண்டு இந்த அதிசயம் நடந்துள்ளது.
இதனால் எதிர்வரும் 14 ஆம் திகதி பௌர்ணமி தினத்தன்று வழக்கத்தை விட நிலவு பெரியதாகவும் பிரகாசமாகவும் தெரியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த பெரிய நிலாவைக் காண தவறினால் இன்னும் 18 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இந்த அதிசயம் இனி 2034ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் திகதிதான் நடக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
Source: New feed