
2020ம் ஆண்டு, 8 அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் 4 பேர், அருள்பணித்துவ பயிற்சியில் இருக்கும் 2 இளையோர், மற்றும் பொதுநிலையைச் சேர்ந்த 6 பேர் என, 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.
இந்த 20 பேரில், 5 அருள்பணியாளர்கள், 3 பொதுநிலையினர் என அமெரிக்க கண்டத்தில் 8 பேரும், ஆப்ரிக்க நாடுகளில், ஒரு அருள்பணியாளர், 3 அருள் சகோதரிகள், அருள்பணித்துவ பயிற்சியில் இருந்த ஒருவர், இரண்டு பொதுநிலையினர் என 7 பேரும் ஐரோப்பிய நாடுகளில் ஒரு அருள்பணியாளர், ஒரு ஆண் துறவி என இரண்டு பெரும் கொல்லப்பட்டுள்ளனர்.
2000மாம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு முடிய உள்ள 20 ஆண்டுகளில், மறைப்பணியில் ஈடுபட்டிருந்த 535 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் 5 பேர் ஆயர்கள் என்றும் பீதேஸ் நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.
மறைப்பணி என்று குறிப்பிடும்போது, அது, திருமுழுக்கு பெற்ற அனைவரின் பணி என்றும், அவ்வாறு திருமுழுக்கு பெற்றவர்களில், மத நம்பிக்கை என்ற அடிப்படையில் வன்முறைகளுக்கு உள்ளாகும் அனைவரின் மரணங்களும் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன என்றும் பீதேஸ் அறிக்கை மேலும் கூறுகிறது.
Source: New feed