
புதிய 2019ம் ஆண்டு என எண்ணுவதற்குள் நாள்கள் உருண்டோடி, நாம் ஆண்டின் இறுதி நாள்களில் காலடி பதித்துவிட்டோம். 2019ம் ஆண்டு, உலக அரசியலிலும், உலகளாவியத் திருஅவையிலும் பல்வேறு முக்கிய படிப்பினைகளைக் கற்றுத் தந்துள்ளது. இயேசு சபை அருள்பணி முனைவர் பவுல் ராஜ் அவர்கள், 2019ம் ஆண்டு உலக அரசியலை இன்று ஒரு மீள்பார்வை பார்க்கிறார். இவர், உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில், ஆன்மீக மற்றும் உளவியல் துறைத் தலைவர். இந்தியாவின் மதுரை இயேசு சபை மாநிலத்தைச் சேர்ந்த இவர், கடந்த பல ஆண்டுகளாக, உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
Source: New feed
