ஆவியானவரின் கொடைகளைப் பெற்று அவருக்கு சாட்சியம் பகர்ந்து பணிசெய்ய நாம் அழைக்கப்பட்டுள்ளோம்”
இன்று எமது பங்கில் எமது பங்கைச் சேர்ந்த 102 பிள்ளைகள், புனித மாட்டீனார் சிறிய குருமட மாணவர்கள் 21 பேர் என 123 சிறார்களுக்கு உறுதிப்பூசுதல் திருவருட்சாதனம் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி ஜஸ்டின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களால் வழங்கப்பட்டது.
இயேசுவின் பாடுகள், மரணத்தைத் தியானிக்கும் இத் தவக்காலத்தில் நாம் உலகியல் போக்குகளை ஒறுத்து செப, தியான மனநிலையில் நிலைத்திருக்க வேண்டும் எனவும், ஆவியானவரின் கொடைகளைப் பெற்றுக்கொள்ளும் நாம் எமது வாழ்வில் ஆவியின் கனிகளாகிய அன்பு, பொறுமை, பரிவு, இரக்கம் என்பவற்றை வாழ அழைக்கப்பட்டுள்ளோம் எனவும் ஆயர் தனது மறையுரையில் கூறினார்.
Source: New feed