
பொதுக்காலம் முப்பத்து மூன்றாம் வாரம்
வியாழக்கிழமை
I 1 மக்கபேயர் 2: 15-29
II லூக்கா 19: 41-44
ஆண்டவரின் திருச்சட்டத்தில் பேரார்வம் கொண்டு வாழ்வோம்
இப்படிப்பட்டவர்கள் இருந்தால் உலகை வெல்ல முடியும்:
மெதடிஸ்ட் திருஅவையை நிறுவியவர் ஜான் வெஸ்லி (1703-1791) இங்கிலாந்தைச் சார்ந்தவரான இவர் ஒருமுறை இவ்வாறு கூறினார்: எனக்குக் மட்டும் கிறிஸ்துவைத் தவிர வேறு யாரையும் அன்பு செய்யாத, பாவத்தைத் தவிர வேறு எதையும் வெறுக்காத நூறு இளைஞர்கள் கிடைத்தால், இந்த உலகத்தையே கிறிஸ்துவுக்காக வென்று தருவேன்.”
ஜான் வெஸ்லி சொல்வதுபோல் கிறிஸ்துவை மட்டுமே அன்புசெய்யும் நூறு இளைஞர்கள் இருந்தால், இந்த உலகைக் கிறிஸ்துவுக்காக நிச்சயம் வெல்ல முடியும்! இன்றைய இறைவார்த்தை கடவுளின் திருச்சட்டத்தின்மீது அல்லது கிறிஸ்துமீது பேரன்பு கொண்டு வாழ நமக்கு அழைப்புத் தருகின்றது. அது குறித்து நாம் சிந்திப்போம்.
திருவிவிலியப் பின்னணி:
“நானே உன் கடவுளாகிய ஆண்டவர். என்னைத் தவிர வேறு தெய்வங்கள் உனக்கிருத்தல் ஆகாது” (விப 20:2,3) – இதுதான் ஆண்டவராகிய கடவுள் மோசே வழியாக இஸ்ரயேல் மக்களுக்க்குக் கொடுத்த முதன்மையான கட்டளை. இந்தக் கட்டளையை அல்லது திருச்சட்டத்தை அவர்கள் மீறி நடந்ததாலேயே நாடு கடத்தப்பட்டார்கள். இன்னும் பலவிதமான துன்பங்களை அவர்களை அணுபவித்தார்கள். இப்படி உண்மைக் கடவுளை வழிபடாமல், அவருடைய திருச்சட்டத்தின்படி நடவாமல் இருந்த இஸ்ரயேல் மக்களை ஆண்டவரோடு ஒப்புரவாக்க வந்த இயேசு கிறிஸ்துவையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை (யோவா 1:11). இதனால் இயேசு இன்றைய நற்செய்தியில் எருசலேம் திருக்கோயிலைப் பார்த்து அழுகிறார்.
ஆனால் இதற்கு முற்றிலும் மாறாக, ஆண்டவரின் திருச்சட்டத்தின்மீது பேரார்வத்தோடு செயல்பட்ட ஒருவரைப் பற்றி இன்றைய முதல் வாசகம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது. அவர்தான் மத்தத்தியா. இவரிடம் மன்னரின் அலுவலர்கள் கடவுளைப் புறக்கணித்துவிட்டு, எல்லாரையும்போல் பிற தெய்வங்களை வழிபடுங்கள், அதனால் நீங்கள் மன்னனின் நண்பர்கள் ஆவீர்கள் என்றெல்லாம் சொன்னபோது, இவரும் இவருடைய புதல்வர்களும் ஆண்டவரில் நிலைத்திருந்து, அவரது திருச்சட்டத்தைக் கடைப்பிடித்து வாழ்கின்றார்கள்.
சில நேரங்களில் நமக்கும் உண்மைக் கடவுளை மறந்து, பிற தெய்வங்களை வழிபட்டால் ஆதாயம் கிடைக்கும் என்ற எண்ணம் தோன்றலாம். உண்மையில் ஆண்டவரின் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்து, அவரை அன்பு செய்கின்றபோது மட்டுமே, அவரது அன்பு நமக்குக் கிடைக்கும் (விப 20:6). ஆதலால், நமக்குத் துன்பங்கள் வருகின்றன, ஆதாயம் கிடைக்கின்றது என்பதற்காக அவரை விட்டு விலகாமல், அவரில் என்றும் நிலைத்திருந்து, அவரது அன்பு மக்களாய் நாம் வாழ்வோம்.
சிந்தனைக்கு:
ஆண்டவரில் நிலைத்திருப்பவர் எந்நாளும் நிலைத்திருப்பார்.
எவரும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது என்பதால், நமக்கு வாழ்வு தரும் ஆண்டவருக்கு மட்டுமே பணிவிடை செய்வோம்.
பதற்றத்தை விலக்கி, படைத்தவரைப் பற்றிக்கொள்வோம்.
இறைவாக்கு:
‘என்மீது அன்புகூர்ந்து என் விதிமுறைகளைக் கடைப்பிடிப்போருக்கு ஆயிரம் தலைமுறைக்கும் பேரன்பு காட்டுவேன்’ (விப 20:16) என்பார் ஆண்டவர். ஆகையால், நாம் ஆண்டவரின் கட்டளைகளைக் கடைப்பிடித்து அவரது அன்பில் நிலைத்திருந்து, இறையருளை
Source: New feed
