
அதிலே நடப்பவை தான் என்ன? வழிபாட்டின் மூலம் எவ்வகையான அனுபவங்களை நாம் பெறுகின்றோம்? என்னும் கேள்வி களை நாம் கேட்கின்றோம்.வழிபாடு என்பது ஒரு கிரேக்கச் சொல்லை அடியொற்றியது. இலத்தீன் மொழியிலே Liturgia என்றும், ஆங்கிலத்திலே Liturgy என் றும், கிரேக்கத்திலே லெய்தூர்ஜியா என்றும் அழைக்கலாம். லாவோஸ் (Laos) என்றால் ‘மக்கள்’ என்று பொருள்படும், (ergon) என்றால் பணி அல்லது சேவை என்றும் பொருள்படும். ஆகவே , வழிபாடு என்றால் மக்களுக்காக அல்லது மக்களின் பிரதி நிதியாக ஆற்றும் சேவை அல்லது பணி என்று கூறலாம். (லெய்தூர்ஜியா) என்கின்ற வார்த்தை பழைய ஏற்பாட்டின் கிரேக்க மொழிபெயர்ப்பிலே (செப்துவஜின்) 170 தடவைகள் காணப்படுகின்றன. பழைய ஏற்பாட்டினுடைய எபிரேய சொற்களான sheret மற்றும் abad அழகான அர்த்தத்தைக் கொடுக்கின்றன. இவைகள் மக்களுக்கு வழங்கப்படுகின்ற சேவை அல்லது ஆராதனை அல்லது மதிப்பு என்னும் பொருளைக் கொடுக்கின் றன. ஆனால் இந்த வார்த்தைகள் இறைவனுக்கு கொடுக்கப்படுகின்ற போது அவை தனித்துவம் நிறைந்த தாகின்றது. இதனால் கிரேக்க மொழி பெயர்ப்பாளர்கள் இதற்கு லெய்தூர்ஜியா என்கின்ற வார்த்தையை பயன்படுத்துகின்றனர். யுடியன எனும் சொற்பதம் துய்மையைக் குறிக்கின்றது. குறிப்பாக தூய பீடம், தூய நற்கருணைப் பேழை, தூய ஆலயம் மற்றும் இறைவனையும் குறிக்கின்றது. இறைவனின் தூய்மையை மாசுபடுத்தக்கூடாது என்பதற்காக இந்த சொற்பதம் வேதாகமத்தில் அன்னிய கடவுள்களுக்கு பயன்படுத்தப்படவில்லை. லேவியக் குருக்களால் மட்டுமே இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. பிற்காலங்களில் ராபினிக்க இலக்கியங்களிலும் இந்த சொற்பதம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.
புதிய ஏற்பாட்டிலே 15 இடங்களில் லெய்தூர்ஜியா என்கின்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதிகாரிகளுக்கு செய்யும் பணி பற்றிக் கூறப்பட்டுள்ளது: ‘அவர்கள் தங்கள் பணியை ஆற்றும் போது கடவுளுக்கே ஊழியம் செய்கிறார்கள்’ (உரோ. 13:6) செக்கரியாவின் பழைய ஏற்பாட்டுக் குருத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது: ‘அவருடைய திருப்பணிக் காலம் முடிந்ததும் அவர் வீடு திரும்பினார்’ (லூக். 1:23) கிறிஸ்துவின் தூய பலிப்பீடத்தில் பணி செய்வதினைக் குறிப்பிடுகின்றது: ‘அங்கே மனிதரால் அல்ல, ஆண்டவராலே அமைக்கப்பட்ட உண்மையான கூடாரமாகிய தூயகத்தில் ஊழியம் செய்கிறார்: (எபி :8:2). இவ்வாறு விவிலியத்தில் இன்னும் பல இடங்களில் இந்த வார்;த்தைப் பிரயோகத்தைக் நாம் காணலாம். ‘அந்த அருள்தான் என்னைப் பிற இனத்தாருக்குப் பணிசெய்யக் கிறிஸ்து இயேசுவின் ஊழியனாக்கிற்று. பிற இனத்தார் தூய ஆவியால் அர்ப்பணிக்கப்பட்ட, கடவுளுக்கு உகந்த காணிக்கையாகும் படி அவர்க ளுக்கு கடவுளின் நற்செய்தியை அறிவிப்பதே என் குருத்துவப்பணி’ (உரோ 15:16). 2கொரி. 9:12 பிலி. 2:17, 2:30 எபி. 8:6 9:21. இங்கே பயன்படுத்தப்பட்ட சொற்பதங்கள் அடிப்படை மொழிபெயர்ப்பிலே பணியாற்றுதல், திருப்பணி, ஊழியம் செய்தல் போன்ற வார்த்தைகளாக மாற்றப்பட்டுள்ளது. இதனுடைய அர்த்தம் திரிபுபடுத்தப்பட்டாலும் அடிப்படையில் மாறுபடாதவையாகவே உள்ளது.
கிறிஸ்தவம் என்பது அதிகமான சமயக்கருத்துக்களை கொண்டதாகவோ அல்லது மக்களின் நீதி நிலைமைகளில் அதிக அக்கறை கொண்டதாகவோ இருப்பதல்ல. கிறிஸ்தவம் என்பது இறைவன் கிறிஸ்து வழியாக மக்களை எதிர்கொண் டதும் மக்கள் கிறிஸ்து எனும் ஒரு தனி நபர் மேல் கொண்ட அதீத பற்றும், அன்பும் இதனால் கிடைத்த ஒரு விடுதலை யும் ஆகும். இது ஒரு தனிநபர் விடுதலையாக இருக்கலாம், சிலருக்கு அரசியலாக இருக்கலாம். இறைவன் மக்களை இறைவாக்கினர் மூலம் சந்தித்தார, அரசர்கள் மூலமாக சந்தித்தார். நீதித்தலைவர்கள்
மூலமாக சந்தித்தார் இறுதியாக தன்னை மனிதனாக சந்திக்கிறார் கிறிஸ்து பேசும் கடவுளை எமது வழிபாடும் உணர்த்துகிறது.வழிபாட்டிலே இறைவனைக் காண முடியும் வழிபாட்டிலே இறைவனோடு பேசவும், இறை உணர்வை அனுபவிக்கவும் முடியும். மனிதன் இதை அறிந்து ஆழமாகவும் அர்த்தத்துடனும் பேசவும், கடவுளோடு உரையாடவும், அவரது குரலுக்கு செவிகொடுக்கவும் முடிகிறது. இந்த சந்தர்ப்பத்தை தருவது வழிபாடு ஒன்றே.
Source: New feed