
உரோமை ஊர்பானியான பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட கொழும்பு உயர் மறைமாவட்ட புனித யோசவ்வாஸ் இறையியல் கல்லூரியின் 17வது பட்டமளிப்பு விழா கடந்த 7ம் திகதி கொழும்பு பேராயர் இல்ல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கொழும்பு உயர் மறைமாவட்ட துணை ஆயர் பேரருட்திரு ஜெயக்கொடி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 47 மாணவர்கள் தங்களுக்கான இறையியல் கற்கைநெறியை நிறைவு செய்து பட்டத்தினை பெற்றுக்கொண்டார்கள். இப்பட்டமளிப்பு விழாவில் யாழ் மறைமாவட்டத்தை சேர்ந்த 7 மாணவர்கள், தங்களுக்கான பட்டத்தினை பெற்றுக் கொண்டார்கள்.
Source: New feed
