
1962ம் ஆண்டில் யாழ். மறைமாவட்ட குருவாக ஆயர் எமிலியானுஸ் ஆண்டகை அவர்களினால் திருநிலைப்படுத்தப்பட்டு மறைமாவட்டத்தின் நல்லூர், ஊர்காவற்துறை, பேராலயம், நாவந்துறை, மானிப்பாய், பண்டியந்தாள்வு ஆகிய பங்கு தளங்களில் உதவிப்பங்குத்தந்தையாகவும் பங்குதந்தையாகவும் பணியாற்றியுள்ளாதுடன் புனித மடுத்தினார் சிறிய குருமட அதிபராகவும், பாதுகாவலன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராவும், அச்சக முகாமையாளராகவும் புனித சவேரியார் குருமடத்தின் உப அதிபராகவும், உருவாக்குனராகவும், பல நிலைகளிலும் சிறப்பான பணியாற்றியுள்ளார்.
அன்னாரின் பூதவுடல் மக்களின் அஞ்சலிக்காக யாழ். மறைமாவட்ட ஆயர் இல்ல சிற்றாலயத்தில் நாளை 20.02.2021 சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு வைக்கப்படும்.
தொடர்ந்து 22.02.2021 திங்கட்கிழமை மதியம் 3.30 மணிக்கு புனித மரியன்னை பேராலயத்தில் அடக்கச் சடங்கு திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
இறைவனடி சேர்ந்த அருட்தந்தையின் பணிவாழ்விற்காக இறைவனுக்கு நன்றி கூறி அவரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்
Source: New feed