
யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நடுநிலைய ஏற்பாட்டில் மறையாசிரியர் ஆண்டுவிழா மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது. இவ்விழா யாழ். மறைமாவட்ட அனைத்துப் பங்குகளிலும் பணியாற்றுகின்ற மறையாசிரியர்களை ஊக்கப்படுத்தும் முகமாகவும், ஒன்றினைக்கும் முகமாகவும் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவ்விழாவின் ஆரம்ப நிகழ்வாக யாழ். மரியன்னை பேராலயத்தில் காலை 9.30 மணிக்கு யாழ். ஆயர் தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. ஆயர் தமது மறையுரையில் ‘மறையாசிரியர்களாகிய நீங்கள் உங்களிடம் ஒப்படைக்ப்பட்டுள்ள பிள்ளைகளின் விசுவாசவாழ்வு அழிந்துவிடாமல் காக்க உங்களை அர்ப்பணித்து, உலகிற்கு உப்பாக ஒளியாக சீடத்துவத்தில் முன்மாதிகையான வாழ்வை வாழவேண்டுமென்று கூறினார். மரையுரையைத் தொடர்ந்து மறையாசிரியர்கள் தங்கள் அர்ப்பணத்தை புதுப்பித்துக் கொண்டனர். திருப்பலி நிறைவில் 2018ம் ஆண்டு பாடசாலைகளில் நடாத்தப்பட்ட கத்தோலிக்க திருமறைத் தேர்வில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்கும், இவ்வருடம் நடைபெற்ற திருவிவிலிய அறிவுத் தேர்வு, பேச்சுப் போட்டி ஆகியவற்றில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றவர்களுக்குமான கௌரவிப்பு இடம்பெறறது.
அரங்க நிகழ்வுகள் பாதுகாவலன் மண்டபத்தில் 11.15 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. மறைக்கல்வி நடுநிலைய இயக்குநரினால் நிலைய செயற்பாட்டு அறிக்கை இதில் சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து மறைக்கோட்டரீதியிலான பங்குசெயற்பாடுகள் பற்றிய அறிக்கைசமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து கலைநிகழ்வுகள் நடைபெற்றன. திருவிவிலிய அறிவுத் தேர்வு பிரிவு 4 ,பிரிவு 5 இல் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பெற்றவர்கள் ஆயர் அவர்களினால் கௌரவிக்கபட்டர்கள். தொடர்ந்து “மறைக்கல்வியே வாழ்வு” என்ற கருப்பொருளில் வட்டக்கச்சி பங்கு மறையாசிரியர்களின் நாடகம் இடம் பெற்றது. இறுதியாக மறையாசிரியர் எழுச்சிகீதத்துடன் நிகழ்வு நிறைவுற்றது.

இந்நிகழ்வில் மறையாசிரியர்கள் பாடசாலைமாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், அருட்தந்தையர்கள். அருட்சகோதரிகள் ஆகியோரென 550 இற்கும் அதிகமானோர். கலந்துகொண்டனர்.
Jaffna RC Diocese
Source: New feed
