
யாழ். மறைகல்வி நடுநிலைய கேட்போர் கூடத்தில் யாழ் மறைமாவட்ட கத்தோலிக்க இளையோர் ஒன்றியத்தினால் “ அழைத்தல்” ஆண்டினை முன்னிட்டு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நாடக போட்டி நடைபெற்றது. இப்பட்டியில இளவாலை, தீவகம், பருத்துறை, யாழ்ப்பாணம் மறைகோட்டங்களில் இருந்து நான்கு இளையோர் குழுக்கள் பங்குபற்றின. இப்பட்டியின் நடுவர்களாக திரு. கெனத் மேரியன், திரு. யூலியஸ் கொலின், திருமதி. செ. எ. வைதேகி ஆகியோர் இணைந்திருந்தனர். இப்போட்டியில் பங்குபற்றிய நாடகங்கள் அனைத்தும் சிறப்பனவையாக அமைந்திருந்ததுடன் பலரின் பாராட்டினையும் பெற்றுக்கொண்டன. இப்போட்டியில் முறையே முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை விளான், குருநகர், பருத்துறை பங்கு இளையோர் குழுக்கள் தட்டிகொண்டன. இப்போட்டியில் சிறந்த நடிகர், நடிகைக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.
Jaffna RC Diocese





Source: New feed
