
யாழ். மறைமாவட்டக் குருக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று 17.10.2019 வியாழக்கிழமை மாலை 4.00 மணிக்கு யாழ். பாதுகாவலன் கேட்போர் கூடத்தில் ஆயர் வ. தியோகுப்பிள்ளை அறக்கொடைப் பேருரை மிகவும் சிறப்பன முறையில் நடைபெற்றது. ‘நல்லாயனாய் ஆயர் வ. தியோகுப்பிள்ளை சமய, சமூக, அரசியல் பணிகள் ஊடாக வெளிப்படும் தலமைத்துவம்’ என்னும் தலைப்பில் அருட்பணி யோண் பெப்ரிஸ் அன்ரனி அறக்கொடைப் பேருரையை நிகழ்த்தினார். இந்நிகழ்வை குருக்கள் ஒன்றியத் தலைவர் அருட்திரு பெனற் தலைமை தாங்கியதுடன் பிரதம விருந்தினராக மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேர்ணாட் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து சிறப்பித்ததுடன், குருக்கள், துறவியர், குருமட மாணவர்கள், மக்களென நூற்றிற்கும் அதிகமானவர்கள் கலந்து பயனடைந்தார்கள்
Commission For Social Communication
Source: New feed