
மரியாயின் மீது உண்மை பக்தி 4 :
ஒரு ஆன்மாவில் மரியாயைக் காண்கின்ற அவர்களின் பர்த்தாவாகிய பரிசுத்த ஆவி, அந்த ஆன்மாவிடம் பறந்து சென்று அதனுள் முழுவதும் புகுகின்றார். தன்னை அந்த ஆன்மாவுக்கு ஏராளமாய் பொழிந்து தருகின்றார். அந்த ஆன்மா எந்த அளவிற்கு மாதாவுக்கு இடமளிக்கிறதோ அந்த அளவுக்கு தன்னை அதற்குக் கொடுக்கிறார்.
இக்காலத்தில் பரிசுத்த ஆவி ஆன்மாக்களில் ஏன் பளிச்சிடும் ஆச்சரியங்களை செய்யவில்லை என்றால் அதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று அவருடைய உண்மையுள்ள ‘பிரிக்க முடியாத மனவாளியுடன் போதிய ஐக்கியத்தை ஆன்மாக்களில் அவர் காண முடியவில்லை, ‘ பிரிக்க முடியாத மணவாளி ’ என்று கூறுகிறேன். ஏனென்றால் பிதாவுடையவும், சுதனுடையவும் அன்பாக இருக்கின்ற அவர், தெறிந்துகொள்ளப்பட்டவர்களின் தலைவரான சேசு கிறிஸ்துவை அவர்களில் உருவாக்குவதற்கு, மரியாயை ஆட்கொண்ட நேரமுதல், அக்கன்னிகையை அவர் ஒருபோதும் விட்டு நீங்கியதில்லை. ஏனெனில் மாதா எப்போதும் பிரமானிக்கத்துடனும், பிறப்பிக்கும் வல்லமையுடனும் இருக்கிறார்கள். (அதிகாரம் 36)
பரிசுத்த ஆவியுடன் சேர்ந்து, திருச்சபை மரியாயை முதலிலும், சேசுவை இரண்டாவதுமாக வாழ்த்துகிறது; “ பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே “ என்று சேசுவை விட மாதாவை உயர்த்தியிருக்கவில்லை, அவருக்குச் சமமானவர்களும் இல்லை.அப்படிக் கூறினால் அது பொறுத்துக் கொள்ள முடியாத பதிதமாகும். ஆனால் சேசுவை அதிக உத்தமமாக வாழ்த்த வேண்டுமானால் அதற்கு முன் நாம் மரியாயை வாழ்த்த வேண்டும். ஆகவே உண்மையற்ற இந்த தடுமாறும் பக்தர்கள் இருக்கட்டும். உண்மையிலேயே மாதா மீது பக்தி பூண்டிருக்கும் அனைவருடனும் சேர்ந்து நாமும் இவ்வாறு கூறுவோம்;
“ பெண்களுக்குள் ஆசீர்வதிக்கப்பட்டவர் நீரே, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர்வதிக்கப்பட்டவரே !
Source: New feed
