
மன்னார் மறைமாவட்டத்தில் உள்ள பங்குகளில் பணியாற்றும் பீடப்பணியாளர்களுக்கான தலைமைத்துவ பயிற்சியானது கடந்து (19.08.2019- திங்கள்) (செவ்வாய் 20.08.2019) ஆகிய இரண்டு நாட்களும் மன்னார், முருங்கன் டொன்பொஸ்கோ பணியகத்தில் இடம்பெற்றது.
சலேசியன் துறவறசபையின் இளையோர் பணியினுடைய ஓர் புதிய முயற்சியாக பங்குகளின் பணியாற்றும் பீடப்பணியாளர்களுக்கான தலமைத்துவப்பயிற்சி அதாவது LAVA – 2019
Leadership Assistance and Vocational Accompaniment என்னும் புதிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.
அனைத்து பங்குகளினுடைய பங்குத்தந்தையர்களுக்கும் அறிவித்தல் கொடுக்கப்பட்டமைக்கு அமைவாக ஒவ்வொரு பங்கிலும் இருந்தும் குறிப்பாக 21பங்குகளில் இருந்து 340 பீடப்பணியாளர்கள் இந்த தலமைத்துவப் பயிற்சியில் கலந்து கொண்டு பயன் பெற்றுள்ளமை சிறப்பான விடயமாக காணப்படுகின்றது.
19.08.2019 திங்கள் கிழமை காலை 9மணிக்கு இவ் பயிற்சியானது ஆரம்பமாகி செவ்வாய் கிழமை மாலை 3:30மணிவரையான நோரத்தில் பல்வேறுபட்ட நிகழ்வுகளும், பயிற்சிகளும், கருத்தாடல்களும் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஆண்டவர் யேசுகிறிஸ்துவின் தலமைத்துவம் பற்றியும், பணி வாழ்வு பற்றியும், பீடப்பணியாளர்களின் கடமைகள் எனன? பீடப்பணியாளர்கள் சமூகத்தில் எவ்வாறு வாழ வேண்டும்? பலிப்பீடத்தில் பீடப்பணியாளர்கள் எவ்வாறான பணிகளை மேற்கொள்ள வேண்டும்? தலமைத்துவம் என்றால் என்ன? போன்ற தலைப்பின் கீழ் ஆலோசனைகளையும், கருத்துக்களையும், வளவாளர்களாக கலந்து கொண்டாவர்களினால் மிகவும் சிறப்பான முறையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அத்தோடு தலமைத்துவம் தொடர்பான குழு நாடகங்கள், விளையாட்டுக்கள் என்பனவும் இடம்பெற்றுள்ளது.
Source: New feed
