
போதையுடன் வாகனத்தை செலுத்தி விபத்தை ஏற்படுத்திய பொலிஸ் உத்தியோகத்தரை கூண்டில் அடைத்த சம்பவம்!!
இதுவும் இலங்கையில்தான் நடைபெற்றது!!!
தவறிழைத்து எவராக இருந்தாலும் அவர்களது தகுதி தராதரம் பாராது சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது நியதி
சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது புத்தகத்தில் வாசிக்கதான் பொருந்தும் யதார்த்தத்திற்கு நடைபெறாது என எமக்கு புரியும் .
ஆனால் இப்படியொரு சம்பவத்தை நியமாக்கிய காலி மாவட்டத்திலுள்ள வதும்ப பொலிஸ்நிலையத்தின் பொலிஸ் உயரதிகாரி கொடுத்த தண்டனையை நாம் பாராட்டியாக வேண்டும்.
காலியிலுள்ள வதும்ப பகுதியில் சாராயத்தை குடித்து விபத்தை ஏற்படுத்திய குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை சீருடையுடன் குற்றவாளி கூண்டில் எல்லோர் பார்வையில் அடைத்து தண்டித்து ஒரு உயரதிகாரி எப்படி நடக்க வேண்டிய அவசியத்தை எமக்கு காட்டியுள்ளார்,
இதை பலர் சமுக வலைத்தளத்தில் குறித்த உயரதிகாரி சீருடையுடன் குற்றவாளி போல கூண்டில் வைத்தது தவறு என்று எதிர்ப்பு குரல் ஒரு புறம் மறுபக்கம் பாராட்டுகளும் குவிகின்றது.இடையில் குற்றம் செய்த பொலிஸ் அதிகாரியை விட தண்டனை கொடுத்தவருக்குதான் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
Source: New feed
