
கற்பிட்டி பங்கின் கிளை ஆலயமாகிய பத்தளம் குண்டு திருச்சிலுவை மகிமை ஆலய திருவிழா
கற்பிட்டி பங்கின் கிளை ஆலயமாகிய பத்தளம் குண்டு திருச்சிலுவை மகிமை ஆலய திருவிழா இன்று 15.09.2019 ஞாயிற்றுக்கிழமை ஆலயத்தின் பங்குத்தந்தை அவர்களின் தலமையில் இடம் பெற்றது.
இத் திருவிழாவிற்கான நவநாட்கள் கடந்த 10.09.2019ம் தொடக்கம் 13.09.2019 வரையும் நடைபெற்று 14.09.2019 சனிக்கிழமை மாலை 7மணிக்கு வேஸ்பர் ஆராதனையும் 15.09.2019ஞாயிற்றுக்கிழமை இன்று திருவிழா திருப்பலியானது காலை7:30 மணிக்கு குருக்கள் இனைந்து கூட்டுத்திருப்பலியாகவும் ஒப்புக்கொடுக்கப்பட்டது.
இத் திருவிழாவிற்கான நவ நாட்களின் திருப்பலிகளையும் மறையுரையினையும் மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் அலிக்கம்பை பங்கின் பணி குரு வண பிதா சூசைநாயகம் அடிகளார் (CMF) வெவ்வேறு தலைப்பின் கீல் இறைமக்களுக்கு மறையுரையினை வழங்கியிருந்தார்.
திருவிழா திருப்பலி நிறைவில் திருச்சுருப பவனி இடம் பெற்று மக்கள் தொழில் செய்யும் பகுதியால் திருச்சுருபம் வலம் வந்து சிறப்பாசீர் இடம் பெற்றது.
இத் திருவிழா திருப்பலியில் ஏராளமான தமிழ், சிங்கள கத்தோலிக்க இறைமக்கள் பல பாகங்களிலும் இருந்து வருகை தந்து இறையாசீர் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Source: New feed
