
இலங்கையின் நான்கு தமிழ் மறைமாவட்டங்களிலிருந்தும் தெரிவுசெய்யப்படும் இளையோருக்கு ஒன்றிணைந்த மறை ஆசிரியர் உருவாக்கப் பயிற்சியை மேற்கொள்ள வடக்கு-கிழக்கு ஆயர்கள் மன்றம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது. 12ஆம் திகதி கடந்த புதன்கிழமை வவுனியாவில் நடைபெற்ற வடக்கு-கிழக்கு ஆயர்கள் மன்றத்தின் ஆறாவது கூட்டத்தொடரில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. இதன்படி யாழ்ப்பாணம், மன்னார், மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மறைமாவட்டங்களிலிருந்து தலா 12 பயிலுனர்கள் தெரிவுசெய்யபபபட்டு இவர்களுக்கான ஒருமாத கால வதிவிடப் பயிற்சியை மடுத்திருத்தலத்திலுள்ள தியான இல்லத்தில் நடாத்துவதற்கான ஒழுங்குகள் செய்யப்படவிருகின்றன. மன்னார் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்பணி. கிறிஸ்துநாயகம் அடிகள் நான்கு மறைமாவட்டங்களின் மறைக்கல்வி நிலைய இயக்குனர்களோடு இணைந்து இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வார். வருகிற ஜுலை மாதம் இப்பயிற்சி நடாத்தப்படவுள்ளது.
Jaffna Rc Diocese
Source: New feed