
ஏனெனில் இரண்டு அல்லது மூன்று பேர் என் பெயரின் பொருட்டு எங்கே ஒன்றாகக் கூடியிருக்கின்றார்களோ அங்கே அவர்களிடையே நான் இருக்கிறேன் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (மத் 18,20).
ஆண்டவர் இயேசுவில் பிரியமானவர்களே, திருப்பலியில்விசேடமாக, ஞாயிறு திருப்பலிகளிலும், திருவிழாத் திருப்பலிகளிலும் ,தூபம் காட்டுவதை நீங்கள் கண்டிருப்பீர்கள்.
குரு அவர்கள் பலிப்பீடத்தையும்,
குரு அல்லாவிட்டால் தியாக்கோன் நற்செய்தி நூலையும்,
தியாக்கோன் அல்லது பீடப்பணியாளர் குருவையும்,
மக்களையும் தூபம் காட்டுவதை நாம் அவதானித்திருக்கின்றோம். ஆனால் அது ஏன் என்று எப்போதாவது நாம் சிந்தித்ததுண்டா?
பீடப்பணியாளர் தனக்கு அறிவித்ததன் படி மக்களுக்கு தூபம் காட்டிவிட்டு சென்று விடுகின்றார். அதை அவர்கள் புரிந்துதான் செய்கின்றார்களா?
இரண்டாம் வத்திக்கான் சங்கத்தின் திருவழிபாடு பற்றிய கோப்பிலே, இயேசுவின் உண்மையான பிரசன்னமானது திருப்பலியிலே நான்கு விதத்திலே உணரப்படுகின்றது என்று கூறுகின்றது. அவை:
#1. பகிரப்படும் அப்பத்திலும் இரசத்திலும்,
#2. திருப்பலி நிறைவேற்றும் பணியாளரில்,
#3, இறைவார்த்தையில்,
#4, ஒன்று கூடியுள்ள மக்களில்.
நாம் #தூபம் காட்டுவது இயேசுவுக்கே, இறைவனுக்கே. ஏனென்றால் அவரது உண்மையான பிரசன்னம் அங்கு உள்ளபடியால்.
விசேடமாக நாம் இன்று கவனிக்கப்போவது “மக்களை நோக்கித்” தூபம் காட்டுவதையாகும். இயேசு அவரதுபெயராலே மக்கள் கூடும்போது அங்கே பிரசன்னமாகி இருக்கின்றார். இதை அவரே கூறியிருக்கின்றார்.
அதுதான் மேலே உள்ள இறைவார்த்தை. இதை பீடப்பணியாளர்களுக்கு சொல்லிக்கொடுத்தால் அவர்கள் மிகுந்த அர்த்தத்தோடும், அதி உயர் மரியாதையோடும்மக்களை நோக்கி அங்கே பிரசன்னமாகியுள்ள #இயேசுவுக்குத்தூபம் காட்டுவார்கள் அல்லவா?
நம்மில் பலருக்கு ஏன் அவ்வாறு தூபம் #எம்மை நோக்கி காட்டப்படுகின்றது என்பது புரிவதே இல்லை.
குருவுக்கு காட்டப்படும் #தூபம் #மனிதனுக்கல்ல, மாறாக அவரிலே பிரசன்னமாகியுள்ள இயேசுவுக்கே.
ஆகவே, மேலே சொல்லப்பட்ட 4 வழிகளுக்கும் 3×3 என்ற வகையில் நிறைவான முறையில் தூபம் காட்டப்பட வேண்டும். புனிதர்களுக்கும் ஏனைய புனிதப் பொருட்களுக்கும் (மூன்று முறை இரண்டு இரண்டாக) தூபம் காட்டுவதே சரியான வழிபாட்டு முறையாகும்.
அன்பர்களே, நாம் வழிபாட்டுக்கு ஒன்று கூடியிருக்கும்போது இயேசு அங்கே இருப்பதை நாம் மிகுந்த பக்தியோடு உணர்ந்து, வழிபாடுகளில் குழப்பங்களை உண்டுபண்ணும் எண்ணங்களைத் தவிர்த்து, பராக்குகளின்றி பக்தியோடு குருவோடு சேர்ந்து பலிசெலுத்தி பங்கெடுக்க வேண்டும்.
Source: New feed
