
மார்ட்டின் வீதி யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலைஞான சுரபி தியான மண்டபத்தில் உதவி நிர்வாக இயக்குனர் அருட்திரு அன்ரன் ஸ்ரீபன் அவர்கள் தலைமையில் நன்றித்திருப்பலி ஒப்புக்கெடுக்கப்பட்டது. திருப்பலியின் நிறைவில் நடைபெற்ற ஒன்றுகூடலில் பிரதி இயக்குநர் யோ.யோண்சன் ராஜ்குமார் அவர்கள் திருமறைக்கலாமன்றதிதின் புதிய இயக்குனராக அருட்திரு ஜெயசேகரம் அவர்கள் பாணிப்பொறுப்பை ஏற்று செயற்படுவார் என்ற அறிவிப்பையும் விடுத்தார்.
மன்றத்தின் ஸ்தாபக இயக்குநர் நீ.மரியசேவியர் அடிகளாரின் மறைவுக்குப் பின்னர் பலமாதகாலமாக நிலவி வந்த வெற்றிடம் இதன் மூலம் நிரப்பப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மன்ற அலுவலக முன்றலில் மன்றக் கொடி ஏற்றி வைக்கப்பட்டது. தொடர்ந்து காலை 9.30 மணி அளவில் குருதிக் கொடை வழங்கும் நிகழ்வு பிரதான வீதியில் அமைந்துள்ள மன்றத்தின் கலைத்தூது மணிமண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போது மன்ற அங்கத்தவர்கள் நலன் விரும்பிகள் என பலர் குருதிக்கொடையை வழங்கினார்கள். மன்றத்தின் ஸ்தாபக இயக்குநர் நீ.மரியசேவியர் அடிகளாரை அவரது 82 ஆவது பிறந்தநாளில் நினைவுகூரும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகள் மாலை 5.00 மணியளவில் பிரதான வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கலைத்தூது கலையகத்தில் நடைபெற்றது. காலையிலும், மாலையிலுமாக இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் மன்ற அங்கத்தவர்கள், ஆதரவாளர்கள், நலன் விரும்பிகள் உட்பட பெருமளவானோர் கலந்து சிறப்பித்தார்கள்.
Source: New feed
