
தனது பணிக்காலத்தில் ஏழை மாணவர்களின் கல்விக்காக பெரும் பங்காற்றினார். திருச்சி திருச்சபை வலுப் பெறுவதற்கு அதிக முயற்சிகள் எடுத்தார். இவரின் காலகட்டத்தில்தான் புதிய பேராலயமானது கட்டப்பட்டது. St.ஜேம்ஸ் என்னும் கல்வி நிறுவனத்தை நிறுவிய பங்கு இவருக்கு உண்டு. இன்னும் பல முயற்சிகள் கிறிஸ்தவர்களின் நலனுக்காக எடுத்தார்.

ஆயரின் நல்லடக்க திருப்பலி நாளை (16-10-19) 10 மணிக்கு திருச்சி கத்தீட்ரல் ஆலயத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பலிக்கு பின்னர் அவர் உடல் பெங்களுரு St. John மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் (அவர் விருப்பப்படி) படிக்கும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் /மாணவிகள் உடலை பகுப்பாய்வு செய்து படிப்பிற்கு உதவும் வகைக்காக ஒப்படைக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Source: New feed
