
சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தையும், முல்லைத்தீவு காணமாலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டத்தின் 1008ஆவது நாளையும் பிரதிபலிக்கும் முகமாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதற்கமைய குறித்த போராட்டம் நாளை (10) காலை 10 மணிக்கு முல்லைத்தீவு நகரத்தில் உள்ள தேவாலயத்திற்கு அருகாமையில் முன்னெடுக்கப்படவுள்ளது.
Source: New feed
