
2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் போன்று இலங்கையில் மீண்டும் தாக்குதல் இடம்பெறலாம் என்கின்ற மொட்டைக்கடிதம் காரணமாக புலனாய்வுப் பிரிவினர் பல கோணங்களில் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்தக் கடிதம் அண்மையில் கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்துக்குக் கிடைத்துள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பாடசாலை, மத வழிபாட்டுத்தலம் ஆகிய பகுதிகளுக்கு தாக்குதல் நடத்தப்படலாம் என்று இந்தக் கடிதத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தக் கடிதத்தை அடுத்து கடற்கரை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கொச்சிக்கடை தேவாலயத்தின் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது எனத் தெரியவருகின்றது.

<img class="j1lvzwm4" src="data:;base64, ” width=”18″ height=”18″ />
77
2 Shares
Like
Comment
Share
Source: New feed
