
சுருபங்கள், ஆலயங்கள், வேதபுத்தகம் போன்றவை கடவுளை நினைவூட்டும் சாதனங்கள் மட்டுமே…!
ஆனால், நற்கருணை என்பது
ஆண்டவர் இயேசுவை நினைவூட்டும் பொருள் அல்ல….
அது ஆண்டவரேதான்…!இயேசுவேதான்…!
இந்த உலகில்… கடவுளைக்காட்டு என்று யாராவது கேட்டால்
நற்கருணையை மட்டுமே
நாம் காட்டமுடியும்.
புனிதகுழந்தை தெரசா
தன் இறப்புக்குப்பின்
ஒரு சகோதரிக்குத்தோன்றி
” நான் மோட்சத்தில் யாரை முகமுகமாய்
தரிசிக்கிறேனோ அவரைத்தான் பூமியில்
நீங்கள் நற்கருணையாகப் பார்க்கிறீர்கள் !
வேறுபாடு ஒன்றுமில்லை! ” என்றாள்.
இதே நற்கருணை ஆண்டவர்தான் ஒருவார்த்தையால் குணமாக்கியவர்.
இதே ஆண்டவர்இயேசுதான் இறந்தவனை உயிர்ப்பித்தவர்
Source: New feed