
உக்ரைன் நாட்டில் இடம்பெற்றுவரும் போர் குறித்து தங்கள் கவலையையும், அச்சத்தையும் வெளியிட்டுள்ள அந்நாட்டு இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்க ஆயர்கள், உக்ரைன், மற்றும், இரஷ்யா ஆகிய நாடுகளை, அன்னை மரியாவின் அமல இதயத்திற்கு அர்ப்பணிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
1917ம் ஆண்டில் பாத்திமாவில் அன்னை மரியா கேட்டுக்கொண்டதுபோல, எம் மக்கள் கணக்கிடமுடியாத கடுந்துயரங்களை எதிர்க்கொண்டுவரும் இந்நாள்களில், இவ்விரு நாடுகளையும் அன்னை மரியாவின் களங்கமற்ற திருஇதயத்திடம் பொதுப்படையாக அர்ப்பணிக்கவேண்டும் என்று, உக்ரைன் ஆயர்கள், திருத்தந்தைக்கு அனுப்பியுள்ள மடலில் கூறியுள்ளனர்.
கடந்த ஆறு நாள்களில், 4,53,000த்திற்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் போலந்து நாட்டில் அடைக்கலம் தேடியுள்ளனர். மார்ச் முதல் தேதியன்று மட்டும், 98 ஆயிரம் பேர், போலந்துக்குச் சென்றுள்ளனர்.
Source: New feed
