
மகிழ்ச்சி நிறை மறையுண்மைகள்.
1. தேவமாதாவுக்கு கபிரியல் அதிதூதர் காட்சி அளித்து மங்கள வார்த்தை சொன்னதைத் தியானித்து,
இன்றைய திருப்பலி பதிலுரைப்பாடல் திருப்பாடல் 7:1-ல்,
“ஆண்டவரே, உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்.” என வாசிக்கின்றோம்.
நெருக்கடியான நேரங்களில் நமக்கு ஆண்டவரே துணை என முழுமையாக விசுவசித்து நாம் ஆண்டவரிடத்தில் அடைக்கலம் புக இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. தேவமாதா எலிசபெத்து அம்மாளை சந்தித்ததைத் தியானித்து,
இன்றைய திருப்பலி நற்செய்தி வாசகத்தில், ““ஒருவரது வாக்குமூலத்தைக் கேளாது, அவர் என்ன செய்தாரென்று அறியாது ஒருவருக்குத் தீர்ப்பளிப்பது நமது சட்டப்படி முறையாகுமா?” என நிக்கதேம் கேட்பதை நாம் வாசிக்கின்றோம்.
ஒருவரைப் பற்றி முழுமையாக அறியாமல் குற்றஞ்சாட்டி இழிவாகப் பேசிய தருணங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பினை நாடி இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. குழந்தை இயேசு பிறந்ததைத் தியானித்து,
“தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப் பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.” என நமதாண்டவர் இயேசு கூறுகிறார்.
ஆண்டவர் புறத்தைவிட அகத்தை அதிகம் கண்ணுற்றுப் பார்க்கிறார். நாம், அகத்திலும், புறத்திலும் என்றும் தாழ்ச்சியுடன் இருக்க இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. குழந்தை இயேசுவை ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுத்ததைத் தியானித்து,
அனுதினமும் எண்ணற்ற நோயாளிகளின் நோயைக் குணமாக்கிய இன்றைய புனிதர் புனித சல்வடோரைத் திருச்சபைக்கு தந்த இறைவனுக்கு நன்றியாக இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. காணமற் போன குழந்தை இயேசுவைக் கண்டு பிடித்ததைத் தியானித்து,
கொரோனா பரவுதலின் இரண்டாவது அலை விரைவில் வரும் என பலர் கூறும் இந்த நேரத்தில் தொற்று பரவுதல் அதிகரிக்காமல் இருக்க இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Source: New feed
