
துயர்நிறை மறையுண்மைகள்.
1. கெத்சமணித் தோட்டத்தில் இயேசு இரத்த வியர்வை வியர்த்ததைத் தியானித்து,
இன்றையத் திருப்பலி முதல் வாசகத்தில்
“உங்களை நினைவுகூரும் பொழுதெல்லாம் என் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்; உங்கள் அனைவருக்காகவும் எப்பொழுதும் மகிழ்ச்சியோடு மன்றாடி வருகிறேன்.” என புனித பவுலடியார் பிலிப்பியரிடம் கூறுகிறார். தனது நற்செய்திப் பணியில் பலவிதங்களில் உதவி செய்தவர்களை நினைவு கூர்ந்து கடவுளுக்கு நன்றி கூறும் புனித பவுலைப் போல நமக்கு உதவி செய்பவர்களை நினைவுகூர்ந்து கடவுளுக்கு நன்றி செலுத்த இந்த முதல் 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
2. இயேசு கற்றூணில் கட்டப்பட்டு அடிக்கப்பட்டதைத் தியானித்து,
இன்றைய நற்செய்தியில் ““ஓய்வு நாளில் குணப்படுத்துவது முறையா, இல்லையா?” என இயேசு கூறுகிறார்.
“நீங்கள் நன்மை செய்வதில் ஆர்வமுடையவர்களாய் இருந்தால், உங்களுக்குத் தீமை செய்யப்போகிறவர் யார்?” (1 பேது 3: 13)-ல் புனித பேதுரு கூறுவார்.
நன்மை செய்வதற்கு நல்ல நாளோ, நல்ல நேரமோ தேவையில்லை. எல்லா நாளும், எல்லா நேரத்திலும் இயேசுவைப் போன்று பிறருக்கு நன்மை செய்ய ஆர்வமுடையவர்களாக இருக்க இந்த இரண்டாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
3. இயேசுவுக்கு முள்முடி சூட்டப்பட்டதைத் தியானித்து,
சுமார் 46 வருடங்கள் சுமை தூக்குபவராகவும், வாயில் காப்பளராகவும் இருந்து கொடுத்த பணியை தாழ்ச்சியுடனும், பொறுமையுடனும், இன்முகத்துடனும், செவ்வனே செய்து இறை அன்பை பகிரும் இயேவின் சிறந்த பிள்ளையாக வாழ்ந்து காட்டிய இன்றைய புனிதர் அல்ஃபோன்ஸஸ் ரோட்ரிக்ஸிடமிருந்து பொறுமை மற்றும் தாழ்ச்சி எனும் வரங்களைக் கற்க இந்த மூன்றாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
4. இயேசு சிலுவை சுமந்ததைத் தியானித்து,
பருவமழை துவங்கியிருக்கும் இந்த காலக்கட்டத்தில் சாதாரண காய்ச்சல், ஜலதோசம் ஆகியவற்றினால் மக்கள் மனதில் உண்டாகும் தேவையற்ற அச்சம், பீதி ஆகியவை அகல வேண்டி இந்த நான்காவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
5. இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்ததைத் தியானித்து,
கொரோனா நோயினால் சிகிச்சை பலனின்று உயிரிழந்த அனைத்து ஆன்மாக்களுக்கும் இறைவன் நித்திய இளைப்பாற்றியை அளித்திட வேண்டி இந்த ஐந்தாவது 10 மணியை ஒப்புக் கொடுப்போம்.
ஆமென்.
Source: New feed