
னங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை சிதைக்கின்ற இனவாத செயற்பாடுகளுக்குப் பின்னால் அரசாங்கத்தின் ஆதரவு இருக்கின்றதா என்கிற சந்தேகம் எழுந்துவிட்டதாக மனித உரிமை செயற்பாட்டாளரான அருட்தந்தை சத்திவேல் தெரிவித்துள்ளார்.
கன்னியா மற்றும் கல்முனை விவகாரத்தில் இன நல்லிணக்கத்தை பலரும் சிதைத்திருந்ததாக குறிப்பிட்ட அவர், ஏன் அவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.
கொழும்பில் இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.
கட்டுவாப்பிட்டிய பிரதேசத்தில் மாதா சிலைப் பேழை மீது கல்லெறிந்து தாக்குதல் நடத்திய சம்பவத்திற்குப் பின்னால் சில கிறுக்குத்தனமான அரசியல்வாதிகள் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட மனித உரிமை செயற்பாட்டாளரான ஹேமன் குமார, ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலுக்குப் பின்னர் அரசாங்கம் இனவாத சக்திகளை அடக்குவதற்குத் தவறிவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.
Source: New feed
