
கௌரவ ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு இம்மானுவேல் பெர்னாண்டோ அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்று (25) பிற்பகல் ஆளுநர் அலுவலகத்தில் இடம் பெற்றது.
இச் சந்திப்பில் மன்னார் மாவட்டம் தொடர்பான பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும், தற்கால சூழ்நிலைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டு கலந்துரையாடல் இடம் பெற்றது. இதில் ஆயர் ஆண்டகை அவர்களுடன் மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் வண பிதா விகடர்.சோசை அடிகளார் அவர்களும், குருக்களும் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.

Source: New feed
