
இரவின் இருளை
கிழிக்கும் நிலவாய்
நம் வாழ்வோடு மலர்ந்தீர்,
வெளிச்சத்தின் மலராய்!
உரைத்ததில்லை இதுவரை நீர்
மனம் புண்பட ஓர் வார்த்தை,
மறந்ததில்லை இங்கே நாம்
மனம் பிரார்த்திக்க உமக்காக!
இளமை உம்மோடு
இனிதாய் சங்கீதம் பாட,
உயிரின் வேர்களில்
உற்சாகம் ஊற்றெடுத்தாேட,
மனதின் மேடைதனில்
மகிழ்ச்சி தாண்டவமாட,
மண்ணில் என்றென்றும்
காற்று உம் புகழ் பாட,
வரிகளில் தூது விடுகிறேன்
உமக்கான நன்நாளிலே,..
வல்லோனின் வரங்கள்
எல்லைகள் தகர்த்து,
எங்கும் என்றென்றும்
உம் மீது பொழிந்திடவே
அன்னையிடம் மண்டியிட்டு!..
Source: New feed
