
Zoom செயற்திட்டத்தை செயல்படுத்த இணையத்தில் சமூகமளித்து
ஆலோசனை வழங்கிய அனைவருக்கும்
நன்றிகள். உங்கள் பணி தொடரவேண்டும்.
எமது சனசமூக நிலையத்தால் மேற்கொள்ளப்படும் இணைய சந்திப்பின் நோக்கம் கிராம மக்களுக்கும் புலம்பெயர் மக்களுக்குமான நேரடி உறவை வளர்ப்பதே ஆகும்.
குறிப்பாக புலத்திலும் எமது கிராமத்திலும் உள்ள இளந்தலைமுறையோடு உறவையும்,எமது கிராம பற்றையும் வளர்த்து, இளைய சமூகம் சீரழிந்து,
சிதைக்கப்படும் கலாச்சாரத்தில் இருந்து
பாதுகாத்து,மேலத்தேய நவீன நற்செயற்பாடுகளை, எமது பாரம்பரியத்தையும் வளர்பதே, எமது இந்த தூர நோக்கு ஆகும்.
இவ்வாறு ஒரு திட்டம் எம்மிடம் இல்லை என்றால்,அடுத்த
புலம் பெயர் தலைமுறைக்கு எமது கிராம பற்றும்,தொடர்பும் இல்லாது பெரும்பான்மையாக அழிந்துவிடும்.
அத்துடன் எமது கிராமம் தொடர்பாகவும், புதிய செயற்பாடு , நன்மை,தீமைகளை புலம்பெயர் மக்களும் கிராம மக்களும் நேரடியாக அறிந்து கலந்துரையாடி கிராமத்தை முன்னேற்றுவதுடன் கிராம ,சனசமூக நிலையம் தொடர்பாக தேவையற்ற வகையில் ஏழும் விமர்சனங்களை, சந்தேகங்களை தவிர்க்கமுடியும்.
உண்மையாக யார் எமது கிராமத்தில்
பற்று, சேவை நோக்கம் கொண்டவர்கள்
அல்லது ஊக்கப்படுத்துபவார்கள் என இனம் கண்டு அவர்களுடன் சேர்ந்து பயணிக்க முடியும்.
குறிப்பாக இந்த
சந்திப்புகளில் நிதி திரட்டுவது நோக்கம் இல்லை ,
நிதி கொடுப்பவர்களுக்குத்தான் முக்கியத்துவம் என்பதும் இல்லை .
வருடத்தில் ஓரிரண்டு தடைவைகள் மட்டுமே நிதி திரட்டி ஊக்கப்படுதல்
நடைபெறும் என்றும் பொதுவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே எம் கிராம அக்கறை கொண்ட
அனைத்து ஊர் மக்களும், புலம்பெயர் இளைய தலைமுறையினரும் இந்த சந்திப்புகளில் பங்கெடுக்க வேண்டும்.
அதை புலம்பெயர் தேசத்தில் வாழும் பெற்றோர்கள் இளையோரை( உங்களது பிள்ளைகளை)ஊக்கப்படுத்த வேண்டும் என்பதே எமது தாழ்மையான வேண்டுகோள்.
அனைவருக்கும் வாழ்த்துகளும் அடைக்கல அன்னையின்
அருளாசிகளும் உரிதாகுக!!!
வணக்கம்
உங்களிள் ஒருவன்!!
Source: New feed
