
இவ்வாண்டு, உலக இரத்த தானம் நாள், இவ்வெள்ளியன்று, ஆப்ரிக்காவின் ருவாண்டா நாட்டின் Kigali நகரில் சிறப்பிக்கப்பட்டது.
இரத்தம் தானம் செய்யும் எல்லாருக்கும் நன்றி சொல்லவும், இரத்த தானத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கவுமென, ஐ.நா.வின் உலக நலவாழ்வு அமைப்பு, ஒவ்வோர் ஆண்டும், ஜூன் 14ம் நாளன்று, உலக இரத்த தான நாளைக் கடைப்பிடித்து வருகின்றது.
1900மாம் ஆண்டு, இரத்தத்திலுள்ள முக்கிய பிரிவுகளைக் கண்டுபிடித்த ஆஸ்திரிய நாட்டவரான Karl Landsteiner என்பவரின் நினைவாக, உலக நலவாழ்வு நிறுவனம், உலகளாவிய செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்கள், 2004ம் ஆண்டிலிருந்து, இரத்த தான உலக நாளை ஊக்குவித்து, கடைப்பிடித்து வருகின்றன.
Karl Landsteiner அவர்கள், 1909ம் ஆண்டில், போலியோ நோய்க்கிருமிகளைக் கண்டுபிடித்தார். நோயாளரின் வாழ்வுக்கு ஆபத்து நிகழாமல் இரத்தம் ஏற்றும் முறையைக் கண்டுபிடித்தவர்களில் இவரும் ஒருவர்
Source: New feed
