
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செவ்வாய் காலையில், வத்திக்கான் நூலகம் சென்று பார்வையிட்டார்.
மேலும், நமது இவ்வுலக வாழ்வுப் பயணம் மரணத்தில் முடியும் என்பது உண்மையாயினும், அது பற்றி எவரும் சிந்தித்து பார்ப்பதில்லை என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலிய தொலைக்காட்சி தொடர் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
TV 2000 தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய் இரவில் ஒலிபரப்பாகிவரும், ‘Ave Maria’ என்ற தொடர் நிகழ்ச்சியில், அருள்மிகப்பெற்ற மரியே என்ற செபம் பற்றிய சிந்தனைகளை வழங்கிவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாறு கூறியுள்ளார்.
இப்பொழுதும், எமது மரண வேளையிலும் என்ற வேண்டுதல் பற்றிய சிந்தனைகளை, இச்செவ்வாயன்று பகிர்ந்துகொண்டுள்ள திருத்தந்தை, அருள்மிகப்பெற்ற மரியே என்ற செபம், மீட்பின் மாபெரும் உண்மையோடு தொடங்குவதுபோல், பாவத்தின் கனியாகிய, மனிதரின்நிலை பற்றிய மாபெரும் உண்மையோடும் நிறைவடைகின்றது என்று கூறினார்.
சாத்தானும், ஏவாளும் மரணம் பற்றி சிந்திப்பதற்கு அழைப்பு விடுக்கின்றனர் என்றுரைத்த திருத்தந்தை, எனது மரண வேளையில், அன்னை மரியை அழைத்து, எனக்கு அருகில் இருந்து அமைதியைத் தாரும் என செபிப்பேன் என்றும் கூறினார்.
இன்றைய இளையோர் தனிமையையும், கைவிடப்பட்டதாயும் உணர்வதற்கு, சமூகத்தின் புறக்கணிப்பு கலாச்சாரமே காரணம் என்றும், அன்னை மரியைப் போன்று, இன்றைய இளையோரும், மூலங்களில் வேரூன்றச் செய்ய வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.
தற்கொலை பற்றியும் கூறியத் திருத்தந்தை, இது மீட்பிற்கான கதவுகளை அடைப்பதாக உள்ளது எனவும், மரணத்தை, இறுதி நீதிச் செயலாக நினைத்து பார்க்கின்றேன் எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
Source: New feed