ஓ புனித கன்னியே, வாழ்வின் கசப்பான கிண்ணமாகிற இக்கட்டு இடைஞ்சல்களோடு ஓயாது போராடி அல்லலுற்று இருப்பவர்கள் மீது உமது கருணைக் கண்களைத் திருப்பியருளும்.
ஒருவர் ஒருவரை அன்பு செய்து பிரிந்து போயிருப்பவர்கள் மீது இரக்கமாயிரும்.
அமைதியற்ற எங்கள் இதயத்தின் மீது இரக்கமாயிரும்.
பலவீனமுள்ள எங்கள் விசுவாசத்தின் மீது இரக்கமாயிரும்.
நாங்கள் அன்பு செய்யும் அனைவர்மீதும் இரக்கமாயிரும்.
அழுகிறவர்கள், அஞ்சுகிறவர்கள் ஆகிய இவர்கள் மீது இரக்கமாயிரும்.
நம்பிக்கையையும் அமைதியையும் எல்லா மனிதர்களுக்கும் தந்தருளும். ஆமென்.
மாதாவே சரணம்மரியே வாழ்க
Source: New feed