யாழ் மறை மாவட்ட பொதுநிலையினர் கழக மாதாந்த ஒன்றுகூடல் மறைக்கல்வி நடு நிலையத்தில் ஆரம்பமாகியது.இதில் ஆறு மறைக்கோட்ட பிரதிநிதிகளும் வருகை தந்திருந்தனர் 2019 ம் ஆண்டுக்கான செயற்றிட்டங்கள் அடங்கிய அறிக்கை இயக்குநரால் மறைக்கோட்ட பிரதிநிதிகளிடம் வழங்கப்பட்டது. சிறப்பு நிகழ்வாக ஆண்டின் தொடக்கத்தில் நடை பெற்ற முதலாவது கூட்டம் என்பதால் வழமை போன்று இவ்வருடமும் ஆயருடன் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கழகத்தின் இவ்வாண்டு செயற்பாடுகள் தொடர்பாக ஆயர் கேட்டறிந்தார். தொடர்ந்து சிறப்பு உரையும் வழங்கியிருந்தார்.
Source: New feed