2016 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மறைமாவட்டத்தில் ‘புதிதாய் வாழ்வோம்’ – செயலற்ற விசுவாசம் உயிரற்றது -(யாக். 2: 26) என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற மேய்ப்புப்பணி மாநாட்டின் மீளாய்வுக் கூட்டம் 19.02.2019 அன்று பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணாம் அடிகளாரின் நெறிப்படுத்தலில் மறைமாவட்ட ஆயர் அருட்கலாநிதி யஸ்ரின் பேணாட் ஞானபிரகாசம் ஆண்டகையின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அருட்கலாநிதி எஸ். ஜே. இம்மானுவேல் அடிகளார் சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மேய்ப்புப்பணி மாநாட்டில் முன்மொழியப்பட்ட பணிகள் மறைமாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள விதம் பற்றி கலந்துரையாடப்பட்டதுடன் எதிர் காலத்தில் செய்யவேண்டிய பணிகள் பாற்றிய கலந்துரையாடல் குழுக்களாக பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில் மறைமாவட்டத்தின் அனைத்து பங்குகளிலிருந்தும் பங்கு பிரதிநிதிகள், குருக்கள், துறவிகள் என பலரும் கலந்துகொண்டனர். இறுதியாக இம் மீளாய்வுக் கூட்டத்தின் பயனாக எடுக்கப்பட்ட தீர்மனாம்களை இலகுவான முறையில் நடைமுறைபடுத்துவதற்கு உதவியாக கண்காணிப்பாளர் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது
Source: New feed