
இம்மையில் சொத்தை நூறுமடங்கும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்.
மாற்கு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 10: 28-31
அக்காலத்தில் பேதுரு இயேசுவிடம், “பாரும், நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே” என்று சொன்னார்.
அதற்கு இயேசு, “உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்: என் பொருட்டும் நற்செய்தியின் பொருட்டும் வீடுகளையோ, சகோதரர்களையோ, சகோதரிகளையோ, தாயையோ, தந்தையையோ, பிள்ளைகளையோ, நிலபுலங்களையோ விட்டுவிட்ட எவரும் இம்மையில் நூறு மடங்காக வீடுகளையும் சகோதரர்களையும் சகோதரிகளையும் தாயையும் நிலபுலங்களையும், இவற்றோடுகூட இன்னல்களையும் மறுமையில் நிலைவாழ்வையும் பெறாமல் போகார்.
முதன்மையானோர் பலர் கடைசி ஆவர்; கடைசியானோர் முதன்மை ஆவர்” என்றார்.
ஆண்டவரின் அருள்வாக்கு.
——————————————
சிந்தனை
தன்னை நம்புவோருக்கு அருளப்படும் ஆசீரைப் பார்க்கின்றோம்.
நிறைவான பலனையே தருவதாக வாக்களிக்கின்றார்.
வாக்கு மாறாவர் இன்றும் அதனை அருளிக் கொண்டு இருக்கின்றார் என்பதுவே உண்மை.
வாக்கு மாறாதவர் தான் சொன்னபடியே செய்து கொடுத்து தன் பணியாளர்களை பராமரித்து வருகின்றார் என்பதற்கு நாங்களே சாட்சிகள்.
இறையாட்சிக்காய் துறந்த எல்லாவற்றையும் நூறு மடங்கு தந்து ஆசீர்வதிக்கின்றார் என்பதுவே உண்மை.
எந்த துறவியும் உணவின்றி மரித்தார் என்று சொல்லுவதற்கில்லை என்பதுவே உண்மை.
Source: New feed