நீங்கள் உங்களையே இன்னும் அதிகமாய் பிறருக்கு அளிக்கும்போது, இன்னும் அதிகமாய் பெறுவீர்கள் மற்றும் மகிழ்வாய் இருப்பீர்கள். இதை நினைவில் கொள்ளுங்கள்” என்ற ஆலோசனை, திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக, செப்டம்பர் 6, இவ்வியாழனன்று பதிவாகியிருந்தது.
மேலும், அடுத்த ஆண்டு பானமா நாட்டில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளை ஒருங்கிணைக்கும், பானமா பேராயர் José Domingo Ulloa Mendieta அவர்களையும், செக் குடியரசின் சார்பாக, திருப்பீடத்தின் தூதராக, புதிதாக நியமனம் பெற்றுள்ள Václav Kolaja அவர்களையும் செப்டம்பர் 6, இவ்வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பீடத்தில் சந்தித்தார்.
இதற்கிடையே, செப்டம்பர் 5, இப்புதனன்று, திருத்தந்தை வழங்கிய மறைக்கல்வி உரைக்குப் பின்னர், செப்டம்பர் 8, வருகிற சனிக்கிழமை கொண்டாடப்படவிருக்கும் மரியாவின் பிறந்தநாளைக் குறிப்பிட்டுப் பேசிய திருத்தந்தை, இத்திருநாள், கோடைக்காலம் நிறைவுறுவதை நினைவுறுத்துகிறது என்று கூறினார்.
இதே நாள், பல நாடுகளில் அறுவடையைக் குறிக்கும் நாள் என்பதைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இறைவன் தன் வாக்குறுதிகளில் மாறாதவர் என்பதை, அன்னை மரியாவின் பிறந்தநாளும், அறுவடை நாளும் நம் மனங்களில் பதிக்கிறது என்று எடுத்துரைத்தார்.