மன்னார் மறைமாவட்ட ஆயர் ஆண்டகை அவர்களுக்கும், பிரான்ஸ் நாட்டு தூதுவருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இன்று மாலை (04.03.2019 வியாழக்கிழமை) ஆயர் இல்லத்தில் நடைபெற்றது.
குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் காணப்பட்ட மனித புதைக்குழி தொடர்பாகவும், காணாமல் ஆக்கப்பட்டொருக்கான அலுவலகம் (OMB) நிலைகள் பற்றியும் உரிய தரப்பினரை சந்தித்த தூதுவர் இன்று மாலை மன்னார் மறைமாவட்ட ஆயர் அவர்களையும் சந்தித்து உரையாடியுள்ளதுடன் வரலாற்று சிறப்பு மிக்க மடு அன்னையின் திருத்தலத்திற்கும் தனது விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
விசேட விதமாக மன்னார் ஆயர் அவர்களுடனான கலந்துரையாடலில் மிக முக்கியமாக மன்னார் மாவட்ட மாணவ மாணவுகளின் கல்வி வளர்சிக்கான உதவிகள் தொடர்பாகவும், இளைஞர், யுவதிகளுக்கான தொழில்வாய்ப்புக்கள் தொடர்பாகவும், அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது
Source: New feed