
வரலாற்று சிறப்பு மிக்க மன்னார் மடு அன்னை தேவாலையத்திற்கு இராணுவ கட்டளைத்தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக விஜயம்.
மன்னார் மடு அன்னை தேவாலையத்திற்கு இராணுவக்கட்டளைத்தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக அவர்கள் இன்று மாலை விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
இவரின் விஜயத்தின் போது மன்னார் மறைமாவட்ட ஆயர்,மற்றும் குருக்கள் இணைந்து விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு இறையாசீர் வழங்கப்பட்டதுடன் குறிப்பாக மடு அன்னையின் திருச்சுருபம் ஒன்றும் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு அன்னையின் திருச்சுருபம் வைப்பதற்கான கட்டிடத்தினை மன்னார் மறைமாவட்ட மேதகு ஆயர் ஆண்டகை ஆசீர்வதிக்க இராணுவ கட்டளைத் தளபதி அவர்களினால் திரைநீக்கம் செய்யப்பட்டு அன்னையின் திருச்சுருபம் அதிலே வைக்கப்பட்டது. அத்தோடு இலங்கை இராணுவத் தளபதியின் வருகையின் நினைவாக மடு அன்னையின் ஆலத்தின் முன்பகுதியில் இராணுவ தளபதி அவர்களினால் மரக்கன்று ஒன்றும் நடப்பட்டது.
இன் நிகழ்வில் வன்னி இராணுவ கட்டளைத்தளபதி, இராணுவ அதிகாரிகள், குருக்கள், கன்னியர்கள், இறைமக்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் இறையாசீரையும் பெற்றுச்சென்றனர்.
Source: New feed