செப்டம்பர் 12, இப்புதனன்று, மரியாவின் புனிதமான பெயரின் திருநாள் சிறப்பிக்கப்பட்டதையொட்டி, அன்னை மரியாவை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டிருந்தார்.
“இவ்வுலக பயணத்தில் நாம் அனுபவிக்கும் மகிழ்வுகளையும், கடினமான தருணங்களையும் நமதன்னை மரியா நன்கு உணர்ந்திருக்கிறார்” என்று சொற்களை, தன் டுவிட்டர் செய்தியாக திருத்தந்தை பதிவு செய்திருந்தார்.
மேலும், பாலியல் முறைகேடுகள் என்ற பிரச்சனையின் விளைவாக, அமெரிக்க ஐக்கிய நாட்டின் தலத் திருஅவை சந்தித்துவரும் சவால்களைக் குறித்து கலந்துபேச, அந்நாட்டு ஆயர் பேரவையின் உயர் மட்டத் தலைவர்கள், செப்டம்பர் 13, இவ்வியாழன், திருத்தந்தையைச் சந்திக்கின்றனர் என்று திருப்பீட செய்தித்தொடர்பாளர், Greg Burke அவர்கள், செய்தியாளர்களிடம் கூறினார்.
அமெரிக்க ஜக்கிய நாட்டு ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் டேனியல் டி’னார்டோ, துணைத்தலைவர் பேராயர் ஹோஸே ஹொராசியோ கோமஸ், செயலர், அருள்பணி பிரையன் பிரான்ஸ்ஃபீல்டு ஆகியோருடன், சிறார் பாதுகாப்பு திருப்பீட அவையின் தலைவரும், பாஸ்டன் பேராயருமான, கர்தினால் பாட்ரிக் ஓ’மேலி அவர்களும், திருத்தந்தையைச் சந்திக்கவுள்ளனர்.
மகிழ்வையும் துயரையும் நன்கு அறியும் அன்னை மரியா
September 13, 2018
One Min Read