புனித மாட்டீனார் சிறிய குருமடம் 2019ஆம் ஆண்டு தன் 150ஆவது ஆண்டு (1869 – 2019) நிறைவை எதிர் நோக்கியுள்ளது என்பது மகிழ்வான செய்தியாகும். புனித மாட்டீனார் குருமடத்தின் தற்போதைய அதிபர் எஸ்.ஜே.சி.பாஸ்கரன் அடிகளார் இன்றைய காலத்தின் தேவையை உணர்ந்து செயற்படும் ஒரு சிறந்த அதிபாரக உள்ளார். தன் முழுநேரத்தையும் முழுமையாக அர்ப்பணித்து நாளைய யாழ் மறைமாவட்;ட குருக்கள் இலங்கையின் எந்த மறைமாவட்ட குருக்களுக்கும் …இரண்டாவதாக இருக்க கூடாது என்ற எண்ணத்துடன் செயற்படும் ஒருவர். யாழ் புனித மாட்டீனார் குருமட அதிபராக மட்டுமல்லாமல் யாழ் மறைமாவட்ட தேவ அழைத்தல் இயக்குனராகவும் செயற்படும் எஸ்.ஜே.சி.பாஸ்கரன் அடிகளார் வந்து பாருங்கள் நிகழ்வை அண்மையில் புதுமெருகுடன் நடத்தி யாழ் மறைமாவட்டத்தில் எதிர்காலத்தில் பணியாற்றவிருக்கும் குருக்களுக்கான தெரிவை மிகவும் சிறப்பாக மேற்கொண்டமை பற்றி காலைக்கதிர் கிறிஸ்தவ செய்தி இதழில் முன்னர் தெரிவித்து இருந்தோம்.
யாழ் ஆயர் மேதகு கலாநிதி பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையும் யாழ் மறைமாவட்டத்தின் எதிர்கால குருக்களின் தரத்திலும் தெரிவிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதன் காரணமாகவே யாழ் புனித மாட்டீனார் குருமட அதிபராகவும் யாழ் மறைமாவட்ட தேவ அழைத்தல் இயக்குனராகவும் ஒருவரே .இருப்பது செயற்படுவதற்கு இலகுவாக இருக்கும் என கருதி இளமையும் துடிப்பும் படைப்பாற்றலும் மிக்க எஸ்.ஜே.சி.பாஸ்கரன் அடிகளாரை நியமித்தார். எஸ்.ஜே.சி.பாஸ்கரன் அடிகளார் தனது ஓய்வில்லாத அர்ப்பணிப்பு மிக்க பணியாலும்; ஆற்றலாலும் சிறப்புப்பணி ஆற்றி வருகிறார். யாழ் புனித மாட்டீனார் குருமட அதிபராக மட்டுமல்லாமல் யாழ் மறைமாவட்ட தேவ அழைத்தல் இயக்குனராகவும் தற்போது செயற்படும் எஸ்.ஜே.சி.பாஸ்கரன் அடிகளாரின் பணிகளை வாழ்த்துவோம். அவரின் அர்ப்பணிப்புமிக்க பணியை காலைக்கதிர் கிறிஸ்தவ செய்தி இதழ் வெகுவாக பராட்டி நிற்கிறது.
Source: New feed